பொதுஇடங்களில் தற்போது முகக்கவசம் தேவையில்லை -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டை பொருத்தவரை பொது இடங்களில் தற்போது முகக்கவசம் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கண்ணகி நகரில் முதல் தலைமுறை கற்றல் பயிற்சி மையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட…

தமிழ்நாட்டை பொருத்தவரை பொது இடங்களில் தற்போது முகக்கவசம் தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கண்ணகி நகரில் முதல் தலைமுறை கற்றல் பயிற்சி மையத்தில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘முதலமைச்சரின்
விரிவான மருத்துவ காப்பீடு 1800 மருத்துவமனைகளில் உள்ளது. எலும்பு அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை 22 லட்சம் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்தார்.

மேலும், முதல்வர், பிரதமர் என இரு காப்பீடு திட்டங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 7 லட்சம் வாக்காளர்கள் உள்ள சோழிங்கநல்லூர் பகுதியில் குடிசை பகுதி மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் வகையில் கடந்த ஆண்டு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி, கலைஞர் முதல்வராக இருந்த போது கெண்டுவரப்பட்ட வரும் முன் காப்போம் திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.  சோழிங்கநல்லூரை பொருத்தவரையில் லட்சக்கணக்கான ஏழை எளியோர் வசிக்கும் நிலையில் நம்முடைய தலைமை செயலாளர் அறிவுறுத்தலின்படி மிகச்சிற்ப்பான மருத்துவ முகாமை ஏற்பாடு செய்துள்ளோம் எனவும் அவர் கூறினார்.

 

மேலும் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒரு நாள் மட்டும் 6 இடங்களிலும் நடைபெறுகிறது. 6 முகாம்களில் அப்போலோ, ராமசந்திரா, அடையார் வி எச்.எஸ். அடையார் கேன்சர் மருத்துவமனை, குளோபல், காவேரி, உள்ளிட்ட மருத்துவமனைகள் உள்ளனர். அத்துடன் கண், காது, மூக்கு, தொண்டை என அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. 1021 மருத்துவ பணி நியமனத்திற்கு வருகின்ற ஏப்ரல் 25, 26ம் தேதிகளில் 25000 மருத்துவர்கள் தேர்வெழுத உள்ளனர். இந்திய மருத்துவத்துறையில் தமிழ்நாட்டில் மருத்துவத்திற்குத் தனி இடம்
அளிக்கப்படுகிறது. யுனானி இளங்கலை சேர்க்கை நடைபெறுகிறது. சித்த மருத்துவ
பல்கலைக்கழக இங்கு நிறுவப்பட உள்ளது.

ஆளுநர் மற்ற மசோதாக்கள் போல் இதனையும் முடக்கி வைத்துள்ளார். கொரோனா பரவலை பொருத்தவரை 6000க்கும் மேற்பட்ட தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ள நிலையில்,  தமிழ்நாட்டில் 300 ஆக பதிவாகியுள்ளது.  மருத்துவரின் ஆலோசனை பெற்று மருத்துகள் எடுத்து கொள்ளவும். தமிழ்நாட்டைப் பொருத்தவரை மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என அறிவுறுத்தியுள்ளோம், பொது இடங்களில் தற்பொழுது தேவைப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.