தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு!

தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. முருகன் கோயில்களில் தைப்பூசம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுவதையொட்டி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்…

தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

முருகன் கோயில்களில் தைப்பூசம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுவதையொட்டி, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் நேற்று முதலே அதிகளவில் குவியத்தொடங்கினர். தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

இதனிடையே, பழனியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து, பாத விநாயகர் கோவில் வரை, அவர் காவடி எடுத்து சென்றார். அவருடன் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் சென்றனர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், பாஜகவின் வேல் யாத்திரையை விமர்சனம் செய்த, திமுக தலைவர் ஸ்டாலினையே, வேல் தூக்க வைத்தது தான் முருகனின் செயல், என்று குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply