கள்ளழகர் வைகையாற்றில் நாளை எழுந்தருளும் நிகழ்வின் போது பக்தர்கள் ஆற்றில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த 11-ஆம் தேதி வைகை அணையில் இருந்து 3 மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அண்மைச் செய்தி: அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
இதன் காரணமாக கள்ளாழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வின்போது பக்தர்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆற்றின் கரையோரத்தில் இருந்து திருவிழாவை காண வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








