செங்குன்றம் மாவட்டம் ஆவடி மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை, ஆவடி நரிக்குறவர் காலனி பகுதியில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு புறப்பட்ட முதலமைச்சர் திடீரென அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் அறையில் அமர்ந்து காவலர்கள் வார விடுப்பு பதிவேடு மற்றும் எஃப்.ஐ.ஆர் பதிவேட்டை ஆய்வு செய்தார்.
மேலும் காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து மகப்பேறு விடுப்பில் சென்றுள்ள பெண் காவலர் புவனேஸ்வரி அவர்களின் விடுப்பு தொடர்பான விவரங்களையும் கேட்டறிந்த அவர், கைதிகளின் அறையையும் மேற்பார்வையிட்டார்.
இதற்குமுன்பு, தருமபுரி அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்த ஆய்வு குறித்து பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
– கோகுலப் பிரியா, மாணவ ஊடகவியலாளர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







