முக்கியச் செய்திகள் சினிமா

அஜித்தை வைத்து தீனா போன்ற படத்தை இயக்க ஆசை -லோகேஷ் கனகராஜ்

அஜித்தை வைத்து தீனா போன்ற படத்தை இயக்க ஆசை உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப ஒரு இயக்குநர் ட்ரெண்ட் செட்டராக மாறி இருப்பார்கள். விக்ரம் திரைப்படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் சினிமாடிக் யுனிவர்ஸ் என்னும் ஒரு புதிய ட்ரெண்ட்டை இயக்குநர் லோகேஷ் உருவாக்கி உள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மிக குறுகிய காலத்தில் மாஸ்டர், விக்ரம் என முன்னணி நடிகர்களை வைத்து மிகப்பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜய்யை வைத்து தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் மீண்டும் இந்தக் கூட்டணி இணைய உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட இன்னும் வெளியாகாத நிலையில் பல கோடிக்கு அந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமை விற்பனை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தற்போது அஜித்தை வைத்து தீனா போன்ற படத்தை இயக்க ஆசை உள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நல்ல கதைகளுக்குப் பஞ்சம் இருப்பதாகப் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் போன்ற இளம் இயக்குநர்கள் மீண்டும் தமிழ் சினிமாவை உலக அரங்கில் மிளிர செய்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

 

-தினேஷ் உதய் 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காலப்போக்கில் அதிமுக, திமுகவில் சங்கமம் ஆகிவிடும்: அமைச்சர் ஐ.பெரியசாமி

Arivazhagan Chinnasamy

7 தமிழர்களை விடுவிக்க திருமாவளவன் கோரிக்கை!

எதிர்க்கட்சிகளை அன்போடு நேசிக்கிறது ஆளுங்கட்சி- ஜி.கே.மணி பேச்சு

EZHILARASAN D
“வாரிசு”வின் வசூல் மழை 800 கோடியை எட்டிய உலக மக்கள் தொகை நயன்தாரா மட்டுமில்லை… நீளும் பாலிவுட் பட்டியல் மழை காலத்தில் செய்யக் கூடாதவை மழைக் காலத்தில் செய்ய வேண்டியது என்ன? மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது எப்படி? உலகக் கோப்பையில் பரிசு மழை! உலகக்கோப்பை கால்பந்து திருவிழா