வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி; சென்னையில் பல்வேறு இடங்களில் மழை

அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘அந்தமான் மற்றும் தென்கிழக்கு…

அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு நகர்ந்தது. மேலும் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும் என தெரிவித்துள்ளது.

பின்னர் அது வடதிசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், புயலாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் சென்னையில் நேற்று நள்ளிரவு பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், அண்ணா சாலை, ராயப்பேட்டை மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
மேலும்,  இன்று காலையும் ‘வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், அண்ணா சாலை, ராயப்பேட்டை மற்றும் மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியதால்  வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானானர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.