தீபாவளி: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு – காவல் ஆணையர் தகவல்

கோயம்பேடு பகுதியில் மட்டும் பாதுகாப்பு பணிக்கு சட்ட ஒழுங்கு போலீசார் 300 பேர், போக்குவரத்து காவலர்கள் 400 பேர் என்ன மொத்தம் 700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால்…

கோயம்பேடு பகுதியில் மட்டும் பாதுகாப்பு பணிக்கு சட்ட ஒழுங்கு போலீசார் 300 பேர், போக்குவரத்து காவலர்கள் 400 பேர் என்ன மொத்தம் 700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாலர்களை சந்திந்த அவர்,  ‘பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு பகுதியில் மட்டும் பாதுகாப்பு பணிக்கு சட்டம் ஒழுங்கு காவல்துறை 300 பேர், போக்குவரத்து காவலர்கள் 400 பேர் என மொத்தம் 700 பேர்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும், ‘ஒரு மோப்ப நாய் குழு மற்றும் CCTV மூலமும் கண்காணிக்கப்படுகிறது. தற்போது வரை நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. அதேபோல் டி நகர் பகுதிகளிலும் 300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பண்டிகை காலங்களில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மேன் பவரை அதிகமாக்கியுள்ளோம்.

குறிப்பிட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பது தொடர்பான புகார்கள் வந்தால் ஆய்வு செய்தபின் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். 120 டெசிபல் அதிகப்படியான சத்தம் உள்ள பட்டாசுகளை வெடித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். லைசன்ஸ் இல்லாமல் செயல்படும் பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.