டிசம்பர் மாத இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், அந்தந்த அரசியல் கட்சிகள் தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றது.
ஒவ்வொரு கட்சியிலும் விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது. கூட்டணி விவகாரம் கூட ஏறத்தாழ இறுதி செய்யப்பட்டு சீட் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும். தேமுதிகவில் அடிப்படை உறுப்பினராக இருந்தால், எந்த பதவிக்கும் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் எனவும், டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்ருக்கொள்ளலாம் எனவும், பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.