வீடுகளை அகற்றுவது அரசாங்கத்தின் எண்ணம் அல்ல என அமைச்சர் எ.வ.வேலு விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு அரசின் அறிவிப்பு சென்னையிலிருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதே எனத் தெரிவித்த அவர், விமான நிலையம் அமைய உள்ள ஊர்களுக்குச் சென்று ஆய்வு செய்தபோது அவர்களிடம் கேட்டு அறிந்தது என்னவென்றால், வேலைவாய்ப்பு அமைத்துத் தர வேண்டும் என்பது அவர்கள் தொடர்ந்து முன்வைக்கும் கோரிக்கையாக உள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கத்தைப் பொறுத்த வரைக்கும் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் வளர்ச்சி என்பது கூடிக்கொண்டு போகிறது எனத் தெரிவித்த அவர், விமான நிலையம் அமைக்கலாம் என்று அரசாங்க முடிவு எடுத்த பிறகு 4 இடத்தை தேர்வு செய்தோம். அதன்படி, கல்பாக்கத்தை முடிவு செய்தோம். ஆனால், கல்பாக்கம் பக்கத்தில் அணுமின் நிலையம் இருப்பதால் அங்கு அமைக்க முடியாது என முடிவு எடுக்கப்பட்டது எனக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘கணியாமூர் வழக்கு; 5 பேருக்கு ஜாமீன் – சென்னை உயர் நீதிமன்றம்’
அதன்பிறகு, பறந்தூறை முடிவு செய்து எங்கு அமைப்பது என்று யோசித்தோம் எனத் தெரிவித்த அவர், ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அந்த நிலத்தைத் தேர்வு செய்தோம். மேலும், நிலம் கூடுதலாக இருக்க வேண்டும் என்பதால்தான் வருவாய்த்துறை சார்பாகக் கையகப்படுத்தலாம் என்று நினைத்தோம் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், விமான நிலையம் அமைகிற சுற்றுவட்டாரத்தில், விமான நிலையத்தை ஒட்டி இருக்கிற இடத்தை தேர்வு செய்து அவர்கள் வீடு கட்டுவதற்குப் பணத்தையும், இடத்தையும் தரப்போகிறோம், வீடுகளை அகற்றுவது அரசாங்கத்தின் எண்ணம் அல்ல என விளக்கமளித்தார்.








