முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

இலவசம் என்று கூறுவதே முதலில் தவறு: திமுக எம்.பி வில்சன்

இலவசங்கள் தடை தொடர்பாக திமுக உரிய நேரத்தில் நீதிபதி கவனத்திற்கு எடுத்து சென்றதால், இந்த வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது என திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் இலவச திட்டங்கள் தொடர்பான வழக்கு விசாரணை நேரலையாக முடிந்துள்ளதை அடுத்து, சென்னை பாரிமுனையில் திமுக மாநிலங்களை உறுப்பினர் மற்றும் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, உச்ச நீதி மன்றம் இன்று தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் கொடுப்பது குறித்த வழக்கை நிராகரித்து, விரிவான விவாதத்திற்கு அனுப்பி வைத்துள்ளது என்றார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 

இதனை முதலில் இலவசம் என்பதே தவறு என கூறிய அவர், மக்கள் நலனுக்காக, தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து, அந்த நேரத்தில் மக்கள் கொடுக்கும் வாக்குகளை கொண்டு வெற்றி பெற்ற பின், சட்டமன்றத்தில் வைத்து அவை மக்களுக்கு திட்டங்களாக அறிவிக்கப்படுகிறது. இந்த விஷயங்களில் நீதி மன்றத்திற்கு விசாரணைக்கு வராது, ஆர்ட்டிகல் 37 படி நீதிமன்றங்கள் நேரடியாக தடை விதிக்க முடியாது.


ஒரு அரசியல் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை கொடுக்கும் போது, அதனை தடை செய்யவோ அல்லது குழு ஆலோசனைக்கு உட்படுத்தவோ நீதிமன்றங்காளால் முடியாது. எங்களது வாதம் உச்ச நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை 3 நீதிபதிகள் அமர்வு எடுத்து விசாரிக்க, விவாதத்திற்கு தலைமை நீதிபதி அமர்வின் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. செய்ய முடியாத வாக்குறுதிகளை கொடுத்து, அரசின் மற்ற விஷயங்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது.

இந்த வழக்கில் திமுக தக்க நேரத்தில் நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு, மக்கள் நலனுக்காக தான் இந்த வாக்குறுதிகள் கொண்டு வரப்பட்டது, நீதிமன்றங்கள் இதில்
தலையிட கூடாது என கூறியதால் நீதிமன்றம் தடை விதிக்காமல் விவாதத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்கள். உச்சநீதிமன்ற நேரலை வழக்கு விசாரணை ஒலிபரப்பு அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று என்றும் அனைவருக்கும் உரிமையுண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாடு முழுவதும் என்ஐஏ வழக்குகள் அதிகரிப்பு – ஆய்வில் தகவல்

G SaravanaKumar

லோகி- கமலின் விக்ரமால் தள்ளிப்போன யானை!

Vel Prasanth

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

Halley Karthik