விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்தில் தேமுதிக மனு!

விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி, தேமுதிக வேட்பாளர் பிரபாகரன் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.  18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது.  இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி…

விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி, தேமுதிக வேட்பாளர் பிரபாகரன் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். 

18-வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது.  இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி 40 இடங்களையும் கைப்பற்றியது.  வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னிலையில் இருந்த நிலையில்,  ஒவ்வொரு சுற்றுக்கும் முன்னிலை நிலவரம் மாறிக்கொண்டிருந்தது.  கடைசி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.  அத்தொகுதியில் அவர் கண்டிப்பாக வெற்றிப் பெறுவார் என தேமுதிக எதிர்பார்த்த நிலையில், தோல்வியை தழுவினார்.

இதனையடுத்து வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்ததாக தேமுதிக குற்றம் சாட்டியது.  இதுகுறித்து புகாரளிப்போம் எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் இதுதொடர்பாக இன்று இந்திய தேர்தல் ஆணையரை சந்தித்த தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்,  அத்தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி மனு அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.