முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா தமிழகம் செய்திகள்

டெல்லியில் குறைகிறது கொரோனா தொற்று: சுகாதாரத்துறை!

டெல்லியில் தினசரி கொரோனா தொற்று பதிப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருவதாக டெல்லி சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், டெல்லியில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 260 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொற்று பாதித்த 6 ஆயிரத்து 453 பேர் குணமடைந்துள்ள தாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 182 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், பலி எண்ணிக்கை 23 ஆயிரத்து 13 ஆக உயர்ந்துள்ள தாகவும் குறிப்பிட்டுள்ளது. தொற்று பாதிப்புடன் 31 ஆயிரத்து 308 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை, டெல்லியில் ஒட்டுமொத்த பாதிப்பு 14 லட்சத்து 15 ஆயிரத்து 219 எனவும், இதில் 13 லட்சத்து 60 ஆயிரத்து 898 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்து 155 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், 49 ஆயிரத்து 957 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

3 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு!

டெல்லி சென்றார் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Jeba Arul Robinson

கோயில் நிலங்கள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு

Saravana Kumar