முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

சென்னை, ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் 136 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கோவிட் சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதன்படி ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் 136 ஆக்சிஜன் செறிவூட்டிகளுடன் கூடிய படுக்கைகளை பயன்பாட்டிற்கு, முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பில் செயல்பட உள்ள இந்த கோவிட் மையத்தில் நாள் தோறும் 8 மருத்துவர்களும், 24 செவிலியர்களும் சேவை பணியில் ஈடுபட உள்ளனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனை யில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்கெனவே உள்ள நிலையில், தற்போது மேலும் 136 ஆக்சிஜன் படுக்கைகள் இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Related posts

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு!

Gayathri Venkatesan

இன்று 16ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்; நாகை மீனவர்கள் திதி கொடுத்து அஞ்சலி!

Jayapriya

சர்ச்சையான கிரெட்டா தன்பெர்க் ட்விட்!