சூழலியல் அறிக்கை மொழிபெயர்க்க அவகாசம் தேவை: மத்திய அரசு

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை (EIA)மொழிபெயர்க்க இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையைத் திரும்ப பெற…

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை (EIA)மொழிபெயர்க்க இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையைத் திரும்ப பெற கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் விக்ராந்த் டோங்கட் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சேதன் சர்மா, நீதிபதிகள் டி.என். படேல், பிரதீக் ஜலான் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை 22 மொழிகளிலும் மொழிபெயர்க்க இன்னும் கால அவகாசம் தேவைப்படுகிறது என மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


முன்னதாக கடந்த பிப் 25-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சேதன் சர்மா, நீதிபதிகள் டி.என். படேல், பிரதீக் ஜலான் அடங்கி அமர்வு சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை அரசியலமைப்பின் எட்டு அட்டவணையில் உள்ள அனைத்து 22 மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும். அப்போதுதான் அறிக்கையில் உள்ள விஷயங்களை நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் புரிந்துகொள்வார்கள். இதனால் சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை மொழிபெயர்க்க வேண்டும் என மத்திய அரசை டெல்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.