ஆசிரியர் தேர்வு இந்தியா

கிரேட்டா தன்பெர்க் ‘டூல்கிட்’ வழக்கு; பெங்களூரு சூழலியல் ஆர்வலர் கைது

‘டூல்கிட்’ வழக்கில் பெங்களூரு சூழலியல் ஆர்வலர் திஷா ரவி என்பவரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

மத்திய அரசு கடந்தாண்டு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை. போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகளுக்கு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகளை விவசாய அமைப்பினரே செய்து கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதுதொடர்பான விசாரணையில் ஈடுபட்ட டெல்லி போலீஸார், காலிஸ்தான் ஆதரவாளர்களால் குடியரசு தினத்தன்று வன்முறை தூண்டப்பட்டதாகவும், இந்தியாவின் இறையாண்மையைக் கெடுக்க அவர்கள் செய்த சர்வதேச சதி எனவும் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக ட்விட்டரில் உலவிய டூல்கிட்டைக் காண்பிக்கிறார்கள்.

அதில் வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் என்ன ஹேஷ்டாக் உருவாக்க வேண்டும். எப்படிப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டும். வேளாண் சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள், ஏன் அந்த சட்டத்தை எதிர்க்க வேண்டும்,. போராடும் விவசாயிகளுக்கு ஏன் ஆதரவு அளிக்க வேண்டும் போன்ற விவரங்கள் அடங்கியிருந்தது.

இந்த டூல்கிட்டை சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டரில் பகிர்ந்தார். இதை மைய்யமாக வைத்து போலீஸார் விசாரணையை துவக்கினர். மேலும் கிரேட்டா தன்பெர்க் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து டூல்கிட்டை பகிர்ந்த ஐடி, website url குறித்த தகவல்களை டெல்லி போலீஸார் கூகுளிடம் கேட்டிருந்தனர். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடையதாக கூறி பெங்களூருவை சேர்ந்த 21 வயதான திஷா ரவி என்பவரை சைபர் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் 2018ஆம் ஆண்டு “Friday for Future” என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரவார்.

Advertisement:
SHARE

Related posts

3.2 கோடி இந்திய மக்களை வறுமைக்குத் தள்ளிய கொரோனா!

Gayathri Venkatesan

தமிழ் பெண்ணை கரம் பிடித்த பும்ரா!

Saravana Kumar

பெகாசஸ் விவகாரம்: அமைச்சரின் கையிலிருந்த அறிக்கையை பறித்து கிழித்தெறிந்த திரிணாமுல் எம்பி

Halley karthi

Leave a Reply