ஆளுநர் அர்லேக்கருக்கு முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து!

தமிழகத்தின் முழு நேர ஆளுநராக பொறுப்பேற்ற ஆளுநர் அர்லேக்கருக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்,

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அக்.12 அன்று அறிவிப்பு வெளியிட்டார். இதில், கேரளத்திற்கு முழு நேர ஆளுநராகவும், தமிழ்நாட்டிற்கு பொறுப்பு ஆளுநராகவும் இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டிற்கான முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து தமிழகத்தின் முழுநேர ஆளுநராக அர்லேகர் சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று (அக்.15) பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக பதவியேற்றுக்கொண்ட அர்லேக்கருக்கு ப்லவேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் முதலமைச்சர் விஜய் சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு நேரில் சென்று ஆளுநர் அர்லேக்கருக்கு மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.