விளைந்த தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை விவசாய
நிலத்திலேயே அழிக்கும் விவசாயிகள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சி குப்பிச்சிபாளையத்தில்
விவசாயிகள் அதிக அளவில் தக்காளி பயிரிட்டுள்ளனர். உரிய விலை கிடைக்காமல் கிலோ பத்து ரூபாய்க்கு விற்பனையாவதால் தக்காளி செடிகளை விவசாயிகள் அழிக்கும்
பணியில் தற்போது ஈடுபட்டு வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த விவசாயி சேகர் என்பவர் மூன்று ஏக்கரில் தக்காளி பயிரிட்டுள்ளார்.மூன்று ஏக்கருக்கு உழுவதற்கு 17000ரூபாயும், நாற்றுக்கு 30,000ரூபாயும், நாற்று நடுவதற்கு 28,000 ரூபாயும், மருந்து, உரத்திற்கு 60,000 ரூபாயும் செலவு செய்து உள்ளார். தக்காளி பறிப்பதற்கு கிலோவுக்கு 5 ரூபாயும் செலவு ஆகிறது.
ஆனால் தற்பொழுது ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்கப்படுவதால் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும் என்பதாலும், உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை நிலத்திலேயே உழவு ஓட்டி அழித்துளார். இதனால் மூன்று ஏக்கருக்கு 3 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும்
மத்திய, மாநில அரசுகள் விவசாய உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் விளைந்த தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் தோட்டத்திலேயே தக்காளி செடிகளை விவசாயி அழிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது







