செங்கம் அருகே அபாய கட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; பொதுமக்கள் அச்சம்!

திருவண்ணாமலையில்,  பள்ளி அருகே உள்ள  மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி பழுதடைந்துள்ளதால்  மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம்,  செங்கம் அடுத்த கரியமங்கலம் ஊராட்சி அலுவலகம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி  ஒன்று அமைந்துள்ளது. …

திருவண்ணாமலையில்,  பள்ளி அருகே உள்ள  மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி பழுதடைந்துள்ளதால்  மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம்,  செங்கம் அடுத்த கரியமங்கலம் ஊராட்சி அலுவலகம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி  ஒன்று அமைந்துள்ளது.  இத்தொட்டி பழுதடைந்து, பில்லர் கம்பி வெளியில் தெரியும் அளவிற்கு  மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

மேலும்,  இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகிலேயே ஊராட்சி ஒன்றிய
துவக்கப்பள்ளி உள்ளது.  மேல்நிலை நீர் தேக்க தொட்டியானது  மிகவும் மோசமான நிலையில்  உள்ளதால்,  இதனை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் ஒரு வித அச்சத்துடனே கடந்து செல்வதாக தெரிவிக்கின்றனர்.  அது மட்டுமின்றி, விளையாட்டு நேரங்களில் அப்பகுதியில் விளையாடும்போதும்  ஒரு வித உயிர் பயத்துடனே இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உடனடியாக ஆய்வு மேற்கொண்டு மேல்
நீர்தேக்க தொட்டியை  சரி செய்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.