முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆளுநர் குறித்து அவதூறு பேச்சு; திமுக நிர்வாகி மீது ஆளுநர் மாளிகை புகார்

தமிழக ஆளுநரை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் அலுவலகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் நடைபெற்ற ஆளுநர் உரையின் போது, தமிழக அரசு கொடுத்த உரையில் ஆளுநர் சில பகுதிகளை தவிர்த்துவிட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் ஆங்காங்கே இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் நேற்று திமுக சார்பில் சென்னை விருகம்பாக்கம் 128வது வட்டத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தமிழக ஆளுநரை பற்றி அருவருக்கத் தக்க வகையிலும், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனையடுத்து ஆளுநரின் துணைச் செயலாளர் பிரசன்னா ராமசாமி, சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த புகார் மனுவில், மாநிலத்தின் சட்டத்தின் தலைவர் ஆளுநர் மீது திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அருவருக்கத்தக்க வகையில் பேசி கொலை மிரட்டல் விடும் தொனியில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124 என்கிற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவானது நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றுபவர்களை அவர்களின் கடமையை செய்யவிடாமல் தடுத்தல், அவர் மீது அவதூறு பரப்புதல், மிரட்டல் விடுதல் என்கிற வகையில் குற்றமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புகாரை பெற்றுக் கொண்ட சென்னை காவல்துறையினர் இது தொடர்பாக சட்ட வல்லுநர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், அதன் பிறகு உரிய சட்ட பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில், தி.மு.க பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் தமிழ்நாடு ஆளுநர் குறித்தும், எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றியும் பேசிய தரக்குறைவான பேச்சு மிக மிக கண்டிக்கத்தக்கது,

பொதுக்கூட்டத்தில் தி.மு.க பேச்சாளர் ஒருவர் பேசிய போது, தமிழக ஆளுநரை பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் பேசியது அநாகரீகத்தின் உச்சக்கட்டமாகும். அவரது பேச்சிலே தீவிரவாதத்திற்கும், கொலை மிரட்டலுக்கும் இடம் இருப்பதால் சட்டம் ஒழுங்குக்கே பாதகம்.

தி.மு.க வினரால் இது போன்ற சட்டம் ஒழுங்குக்கு சீர்குலைவு ஏற்படும் வகையில் நடைபெறும் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைக்கிறது. எனவே தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக இது போன்ற மிகவும் மோசமான செயல்பாடுகளுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்காமல் இருக்க முதலில் நாகரீகமற்ற முறையில் பேசிய அவரது கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் த.மா.கா சார்பில் வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

OBC சாதிச்சான்றிதழ்; தமிழ்நாடு அரசு அதிரடி

G SaravanaKumar

ஒமிக்ரான் வைரஸ்: கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு

EZHILARASAN D

ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல்

G SaravanaKumar