தீபத் திருநாளாம் தீபாவளி; ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து

தீபாவளி பண்டிகையைக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளர். அந்த வாழ்த்து செய்தியில் “நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் பாசத்திற்குரிய…

தீபாவளி பண்டிகையைக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளர்.

அந்த வாழ்த்து செய்தியில் “நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் பாசத்திற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த தித்திக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த தீபாவளியில் மக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்துவதாகவும். “இந்த தீப ஒளித் திருநாளில் மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட; எல்லம் வல்ல இறைவனின் அருள் கிடைக்கட்டும்” என தீபாவளி திருநாள் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.