முக்கியச் செய்திகள் சினிமா

’எனக்கே தெரியாமல் நான் நடிக்கும் படமா?’ கவுதம் வாசுதேவ் மேனன் ஷாக்

எனக்கே தெரியாமல், நான் நடிக்கும் படம் என வெளியாகியுள்ள அறிவிப்பு அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளதாக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், இப்போது ’ஜோஷ்வா இமை போல் காக்க’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். விக்ரம் நடிப்பில் இயக்கியுள்ள ’துருவநட்சத்திரம்’ படம் தயாராகி இருக்கிறது. இதையடுத்து சிம்பு நடிக்கும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் சில படங்களில் அவர் நடித்தும் வருகிறார். இதற்கிடையே அவர் நடிப்பில் ’அன்புச்செல்வன்’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இந்த போஸ்டரை இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் திரைப்பிரபலங்கள் வெளியிடுவார்கள் எனக் கூறப்பட்டது. அதன்படி அவர்கள் இன்று அந்தப் படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ’காக்க காக்க’ படத்தில் ஹீரோவின் பெயர் அன்புச் செல்வன் என்பதால் இது, அந்தப் படத்தின் இரண்டாம் பாகமா என்றெல்லாம் செய்திகள் வெளியாயின. இதனால் திரைபிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தொடர்பாக கவுதம் வாசுதேவ் மேனன் ட்விட் டரில் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். “இந்த செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. நான் நடிப்ப தாகச் சொல்லப்படும் இந்தப் படம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இந்த போஸ்டரில் போடப்பட்டிருக்கும் இயக்குநரையும் தெரியாது. அவரை சந்தித்ததும் இல்லை. இதன் தயாரிப்பாளருக்கு, அதை ட்வீட் செய்ய பிரபலங்கள் கிடைத்திருக்கிறார்கள். இது போல யாரும் எளிதாக செய்ய முடியும் என்பது எனக்கு அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது’ என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

’உனக்கான இரங்கல் பாட்டை எங்ஙனம் படம் செய்வாய்’: கே.வி ஆனந்த் மரணம்- வைரமுத்து இரங்கல்

Halley karthi

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் 10 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு

Saravana Kumar

தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்படும் பணம் எங்கே செல்லும்? எப்படி பெறுவது?

Ezhilarasan