முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,40,842 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2,40,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,65,30,132 ஆக அதிகரித்துளள்து.

நேற்று மட்டும் கொரோனாவால் 3,741 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,99,266 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்றைய நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3,55,102 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,34,25,467 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது 28,05,399 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 19,50,04,184 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞரை தேடுகிறது போலீஸ்!

Halley karthi

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி

Gayathri Venkatesan

இந்தியா கொரோனா; நேற்றைய பாதிப்பை விட இன்று 12% அதிகம்

Halley karthi