முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்கள் குழு நியமனம்!

கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தற்போது நிலவும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, கீழ்க்காணும் அமைச்சர்களை தொடர்புடைய மாவட்டங்களுக்கு முதலமைச்சர் நியமித்துள்ளார்.

சென்னை மாவட்டம்: மா. சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
பி.கே. சேகர்பாபு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்

செங்கல்பட்டு மாவட்டம்: தா.மோ. அன்பரசன், ஊரகத் தொழில் துறை அமைச்சர்

கோவை: அர. சக்கரபாணி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்.
கா. ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர்.

திருவள்ளூர்: சா.மு. நாசர், பால்வளத் துறை அமைச்சர்

மதுரை: பி. மூர்த்தி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்.
பழனிவேல் தியாகராஜன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை

தூத்துக்குடி: கீதா ஜீவன், சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர்
அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மீன்வளம்-மீனவர் நலத் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்.

சேலம்: வி. செந்தில்பாலாஜி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்

திருச்சி: கே.என். நேரு, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

திருநெல்வேலி: தங்கம் தென்னரசு, தொழில் துறை அமைச்சர்

ஈரோடு : சு. முத்துசாமி, வீட்டு வசதித் துறை அமைச்சர்

காஞ்சிபுரம்: எ.வ. வேலு, பொதுப் பணித் துறை அமைச்சர்

திருப்பூர்: மு.பெ. சாமிநாதன், செய்தித் துறை அமைச்சர்

வேலூர்: துரைமுருகன், நீர்வளத் துறை அமைச்சர்.

விழுப்புரம் : க. பொன்முடி, உயர் கல்வித் துறை அமைச்சர்.
செஞ்சி கே.எஸ். மஸ்தான், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத் துறை அமைச்சர்.

கடலூர்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர்
சி.வி. கணேசன், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்.

நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்கள்: சிவ.வீ. மெய்யநாதன், சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்

கிருஷ்ணகிரி: ஆர். காந்தி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்

தஞ்சாவூர் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

தேனி: இ. பெரியசாமி, கூட்டுறவுத் துறை அமைச்சர்.

கன்னியாகுமரி: த. மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தின் தலைவராக தமிழர் ஒருவர் தேர்வு!

Gayathri Venkatesan

10 ஆண்டுகளாக முடங்கி கிடந்த குரோம்பேட்டை ரயில்வே சுரங்கபாதை பணிகள் மீண்டும் தொடக்கம்!

Saravana

மநீம தலைவர் கமலின் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் குறித்த அறிவிப்பு வெளயீடு!

Nandhakumar