பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் காவலர் கொரோனாவால் உயிரிழப்பு

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தலைமைகாவலர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த வசந்தா மத்திய குற்றப்பிரிவில் பெண் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.…

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் தலைமைகாவலர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்த வசந்தா மத்திய குற்றப்பிரிவில் பெண் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அரும்பாக்கத்தில் உள்ள ஜீவன் மித்தரன் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா பரிசோதனையில் கடந்த 28ம் தேதி தொற்று உறுதியானதையடுத்து எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

நேற்று அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் இன்று அதிகாலை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பால் குழந்தை பெற்ற அடுத்த நாளே பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா தொற்றால் இதுவரை 34,197 பேர் உயிரிழந்துள்ளனர். 20,117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.