முக்கியச் செய்திகள் சினிமா

படப்பிடிப்பில் இயக்குநர் சேரன் காயம்: தலையில் எட்டு தையல்

இயக்குனர் சேரன், ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தின் படப்பிடிப்பில் காயமடைந்தார்.

இயக்குநர் சேரன், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிக்கும் படம், ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. நந்தா பெரியசாமி இயக்குகிறார். ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பாக தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரிக்கும் இந்தப் படத்தில், கவுதம் கார்த்திக் ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவர், நடிகை ஜீவிதா- டாக்டர் ராஜசேகர் தம்பதியின் மகள். மேலும் சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம் புலி, சினேகன், நமோ நாராயணன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் நந்தா பெரியசாமியுடன் சேரன்

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று இத்திரைப் படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்தபோது இயக்குநர் சேரன், கால் தடுமாறி விழுந்தார். இதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டன. இருந்தும் படப்பிடிப்பை ரத்து செய்யாமல் தொடர்ந்து தனது காட்சிகளை சேரன் நடித்துக் கொடுத்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நியாய விலைக் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் வசதி!

Web Editor

“ஊரக உள்ளாட்சித் தேர்தல்; சிறுத்தைகளுக்கு கிடைத்த பேரங்கீகாரம்” – விசிக

Halley Karthik

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Gayathri Venkatesan