ஆட்டோ ஏற்றி நீதிபதி கொல்லப்பட்ட விவகாரம்: விசாரணையை தொடங்கியது சிபிஐ

ஆட்டோ ஏற்றி நீதிபதி கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ, விசாரணையை தொடங்கி இருக்கிறது. இதற்காக 20 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தன்பாக் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி உத்தம்…

ஆட்டோ ஏற்றி நீதிபதி கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ, விசாரணையை தொடங்கி இருக்கிறது. இதற்காக 20 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாக் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட் நீதிபதி உத்தம் ஆனந்த். இவர் கடந்த சில நாட்களுக்கு முன், சாலையின் ஓரமாக நடைபயிற்சி சென்றுகொண்டி ருந்தார். அப்போது அவர் பின்னால் வந்த ஆட்டோ ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த நீதிபதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனை யில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகள், பரபரப்பை ஏற்படுத்தியது. இது திட்டமிட்ட கொலை என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஆனால்,  இந்த வழக்கை விபத்து என்று போலீசார் பதிவு செய்தனர். போலீசாரின் அலட்சியத் தை, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் கண்டித்ததை அடுத்து, விபத்து என்பதை மாற்றி கொலை வழக்காகப் போலீசார் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் 17 பேரை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் அரசு இந்த வழக்கை சிபிஐ -க்கு சனிக்கிழமை மாற்றியது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் விசார ணையை நேற்று தொடங்கியுள்ளனர். இந்த விசாரணைக்காக 20 பேர் கொண்ட சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.