தமிழ்நாட்டில் 90 நாட்களுக்குப் பிறகு கொரோனாவால் 18 வயதான இளம் பெண் உயிரிழந்துள்ளது மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில், சிறுமி இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருந்த நிலையில், 18 வயதான இளம் பெண், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 90 நாட்களாக கோவிட்-19 காரணமாக மாநிலத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படாத நிலையில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணியளவில் காய்ச்சல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட சிறுமி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்குப் பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்குக் கடுமையான கோவிட் தொற்று இருப்பதும், அவரது நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். தொடர்ந்து மருத்துவர்கள் அந்த சிறுமிக்குத் தீவிர சிகிச்சை வழங்கி வந்துள்ளனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 2.30 மணியளவில் இறந்துள்ளார்.
3 மாதத்துக்குபின் கொரோனாவுக்கு ஒருவர் பலிhttps://t.co/WciCN2SQmv | #Covid19 | #CoronaVirus | #TNGovt | #TamilNadu | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/3vbDPO17BY
— News7 Tamil (@news7tamil) June 16, 2022
சிறுமி இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருந்த நிலையில், இறப்புக்கான காரணத்தை விரிவாக ஆய்வு செய்ய மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்த சுகாதாரத் துறை செயலாளர் பி செந்தில் குமார், அவருக்கு நீண்ட நாட்களாக இருமல் மட்டுமே அறிகுறியாக இருந்துள்ளது எனக் கூறினார். மேலும், சிறுமியிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் முழு மரபணு சோதனைக்கு அனுப்பப்படும் என அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்று எண்ணிக்கை, மூன்றாவது அலைக்குப் பிறகு குறைந்து வந்தாலும், கடந்த பிப்ரவரி 27-க்குப் பிறகு புதிய பாதிப்புகள் 400-ஐத் தாண்டின. பொதுச் சுகாதார இயக்குநர் மருத்துவர் டி எஸ் செல்வவிநாயகம் கூறுகையில், இம்முறை பிஏ4 அன் டி பிஏ5 உருமாற்றம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கிறார். “முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மட்டுமே தொற்று பரவுவதைத் தடுக்க ஒரே வழி எனக் கூறும் அவர், வயது மூத்தவர்கள் எளிதில் தொற்று பாதிக்கப்படக்கூடியவர்கள் போதுமான தடுப்பூசிகளைப் போட வேண்டும்,” எனக் கூறுகின்றார். மேலும், இதுகுறித்து நிபுணர்கள் தெரிவிக்கையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் சதவீதம் குறைவாக இருந்தாலும், முழுமையான தொற்று பாதிப்பு எண்ணிக்கை இதுவல்ல, இதைவிடக் கூடுதலாக இருக்கலாம் என்கின்றனர்.
அண்மைச் செய்தி: ‘1 மாதத்தில் 3.40 கோடி – பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை’
இந்நிலையில், சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு (95), கோயம்புத்தூர் (26), நீலகிரி (23) ஆகிய இடங்களில் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளன. காஞ்சிபுரத்தில் 21 புதிய தொற்று பாதிப்பும், கன்னியாகுமரி மற்றும் திருவள்ளூரில் தலா 20 தொற்றும் பதிவாகியுள்ளன. அதேபோல, சேலத்தில் 6 புதிய தொற்றும் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து திருச்சி மற்றும் வேலூரில் 5 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களில் புதிய கோவிட் தொற்று பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. இந்நிலையில்,சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, தற்போது மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பொதுச் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொற்று பாதிப்பு உள்ள 1,938 நோயாளிகளில், 119 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.








