கோயில்களில் ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.
கோயில்களில் ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் அதனை நடத்தி கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மண்டல ஆணையர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களில் நடைபெற்று வந்த ஆன்மீக சொற்பொழிவுகளை மீண்டும் நடத்தி கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளது. மேலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி வழங்கியுள்ளது. திருவிழாக்கள், பிரம்மோற்சவம், தேர் திருவிழாக்கள், கொடை விழாக்களின் போது பக்தர்கள் கண்டு களித்து மகிழும் வகையில் ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கலைநிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யும் போது தமிழ்நாடு அரசு இசை கல்லூரி மற்றும் இசைப் பள்ளியில் பயிற்சி பெற்ற கலைஞர்கள், கலை பண்பாட்டு துறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்தப் பகுதியில் உள்ள கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஆணையர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
– இரா.நம்பிராஜன்