டெல்லி மகளிர் ஆணைய தலைவியிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெளியே உள்ள சாலையில் பெண்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தபோது குடி போதையில் கார் ஓட்டுநர் தன்னிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டதாக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் ட்வீட் செய்துள்ளார். கார் ஓட்டுநர் ஹரிஷ் சந்திரா ஓட்டிய காருக்குள் டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவாலின் கை ஜன்னலில் மாட்டிக்கொள்ள 10-20 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து சுவாதி மாலிவால் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தேன். அப்போது குடிபோதையில் கார் ஓட்டுநர் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அவரை பிடிக்க முயற்சி செய்த போது அவர் என் கையை பிடித்து என்னை இழுக்க முயற்சி செய்தார். கடவுள்தான் என்னை காப்பாற்றினார். பெண்கள் ஆணைய தலைவருக்கே டெல்லியில் பாதுகாப்பு இல்லையென்றால் இங்குள்ள சூழ்நிலையை கற்பனை செய்து பாருங்கள் ” என பதிவிட்டுள்ளார்.
சுவாதி மாலிவாலிடம் அத்துமீறிய கார் ஓட்டுநர் ஹரிஷ் சந்திரா டெல்லியில் உள்ளா சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர். இவரை கைது செய்து டெல்லி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அதிகாலை 3.11 மணியளவில் தங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.