ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை தமன்னாவின் புகைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெயிலர் எனப் பெயர் வைக்கப் பட்டுள்ளது. நெல்சனின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த அனிருத் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட, தர்பார் போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவ்விரு படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்கள் மத்தியில் மாபெறும் வரவேற்பை பெற்ற நிலையில், அனிருந் இந்த படத்தில் என்ன செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
.@tamannaahspeaks from the sets of #Jailer
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/sKxGbQcfXL
— Sun Pictures (@sunpictures) January 19, 2023
ஏற்கனவே வெளியான ஜெயிலர் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் நடிகர் மோகன்லால் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெயிலர் படிப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை தமன்னா இருப்பது போன்ற புகைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் உள்ள நடிகை தமன்னாவின் புகைப்படத்தால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற ஜெய்லராக நடிக்கும் இந்த படம் முழுக்க முழுக்க சிறைக்குள் நடக்கும் அதிரடி சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.