முக்கியச் செய்திகள் இந்தியா

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்; சங்கர் மிஸ்ரா 4 மாதங்களுக்கு ஏர் இந்தியாவில் பயணம் செய்ய தடை

விமானத்தில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் சங்கர் மிஸ்ரா என்பவரை 4 மாதங்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்து அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணியின் இருக்கை அருகே ஒருவர் சிறுநீர் கழித்தார். இந்த சம்பவம் விமான பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையில், பெண் மீது சிறுநீர் கழித்த நபர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்பது தெரிய வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து ஏர் இந்தியா விமானத்தில் அவர் பயணிக்க 30 நாட்கள் தடை விதித்து அந்நிறுவனம் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தை ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் மிகவும் அலட்சியத்துடன் கையாண்டதால், விசாரணை நடத்த மத்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது. டெல்லி போலீசார் விசாரணை நடத்தியதில், சிறுநீர் கழித்த போதை ஆசாமி பெயர் ஷங்கர் மிஸ்ரா என்பது தெரியவந்தது. அவருக்கு டெல்லி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர்.இந்நிலையில், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் தலைமறைவாகி இருந்த சங்கர் மிஸ்ராவை டெல்லி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சங்கர் மிஸ்ரா பணியாற்றி வந்த பன்னாட்டு நிறுவனம் அவரை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.

இந்தநிலையில், ஏர் இந்தியா விமானத்தில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய 4 மாதங்களுகு தடை விதித்துள்ளதாக அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மேற்கு வங்கத்தில் மின்சாரம் தாக்கி 10 பேர் பலி

Mohan Dass

குழந்தைகளை இழந்த விரக்தியில் தாய் ரயில் முன் பாய்ந்துஉயிரிழப்பு!

Halley Karthik

செந்தமிழ் பேச நிறைய கஷ்டப்பட்டேன் – நடிகை த்ரிஷா

EZHILARASAN D