இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூவாயிரத்தை தாண்டியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு நேற்றைய தினம் இரண்டாயிரத்தை கடந்தது. நேற்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தினசரி பாதிப்பு 2,151 ஆக பதிவாகியிருந்தது. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத வகையில் அதிகளவிலான பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் 1,573 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டது. மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று மத்திய சுகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ஒரு நாள் பாதிப்பு 3016- ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 10,981 ல் இருந்து 13,509 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 1,396 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 2.73 சதவீதம் ஆகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 1.71 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு 0.03 சதவீதமாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் 1,10,522 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.







