சிறுவன் ஒருவன் தன் தையல் வகுப்பில் செய்த சட்டையை தனது அப்பாவுக்கு பரிசாகக் கொடுக்கும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு தற்போது வைரலாகியுள்ளது.
பொதுவாகவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு அவர்களது பிறந்தநாள் அல்லது வகுப்பிலோ, விளையாட்டிலோ வெற்றி பெற்றால் அவர்களை பாராட்டுவதற்கு பரிசுகள் வழங்குவது என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடமிருந்து பரிசுகளை பெரும் நிகழ்வு என்பது அரிதான ஒன்று என்றாலும், அத்தகைய நிகழ்வுகள் நிஜத்தினில் நடந்தால், அதை காணும்போது மக்களின்
இதயங்களில் ஒரு அன்பான உணர்வை ஏற்படுத்தும். அந்த வகையில், ஒரு சிறுவன்தன் தையல் வகுப்பில் செய்த சட்டையை தனது அப்பாவுக்கு பரிசாகக் கொடுக்கும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு தற்போது அது வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஆரோன் குவேயா என்கிற அந்த தந்தை, அந்த பதிவில் “Sam made me a shirt at sewing class! I’m floored!!” என தையல் வகுப்பில் தனது மகன் சாம் தனக்காக ஒரு சட்டையை உருவாக்கி கொண்டு வந்து கொடுத்த நிகழ்வை நெகிழ்ச்சியான வரிகளோடு பகிர்ந்து அந்த வீடியோவை பதிவிட்டிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட அந்த வீடியோ, பகிரப்பட்டதிலிருந்து சுமார் 84,000-திற்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளதோடு, 17,000-திற்கும் அதிகமான லைக்குகளை அள்ளி பல பெற்றோர்கள் தங்களது மகிழ்ச்சிகரமான கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








