#CylinderPrice | வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!

தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்ந்து ரூ.1964.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள்…

தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்ந்து ரூ.1964.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. அதன்படி, இந்த மாதத்திற்கான மாற்றம் செய்யப்பட்ட விலை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள் : “ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது” – பிரதமரின் கருத்துக்கு காங். தலைவர் #MallikarjunKharge பதில்!

தமிழ்நாட்டில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,855 ஆக இருந்த நிலையில், ரூ.61.50 உயர்ந்து ரூ.1964.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல டெல்லியில் 1,802 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 1,911.50 ரூபாயாகவும், மும்பையில் 1,754.50 ரூபாயாகவும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.818.50 ஆகவே தொடர்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.