சிலிண்டர் தட்டுப்பாடு – பெங்களூருவில் ஓட்டல்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு காரணமாக பெங்களூருவில் ஓட்டல்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் போர் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போதிய அளவில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்த போதிலும், சென்னையில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே சென்னையில் வணிக கேஸ் சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், சென்னையில் உள்ள உணவகங்கள் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்படும் என்று உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பெங்களூருவில் வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால் கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகரில் இன்று முதல் ஓட்டல்கள் வேலை நிறுத்தம் தொடங்குவதாக பெங்களூரு மாநகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனிடையே சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண சென்னை ஒட்டல் உரிமையாளர் சங்கங்கள் கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.