பிரதமர் மோடி, டிரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? – பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி!

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? என்று சுப்ரமணிய சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

எனக்குத் தெரிந்த தகவல்களை நான் வெளியிட்டால், அது மோடியின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வழிவகுக்கும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சுப்ரமணிய சுவாமி எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “இந்தியாவின் 3-வது முறையாக பிரதமரான மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார்? எனக்குத் தெரிந்த அமெரிக்கர்கள், மோடி சமரசம் செய்து கொண்டதாக கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்த தகவல்களை தற்போது வரை நான் வெளிப்படுத்தவில்லை. அவ்வாறு செய்தால் அது மோடியின் பதவியை ராஜினாமா செய்ய வழிவகுக்கும்,” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.