வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!

தமிழ்நாட்டில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தினமும், சிலிண்டர் விலை மாதம் தோறும் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலை நிலவரம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.5.50 உயர்ந்து ரூ.1,965 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50-க்கு விற்பனையாகிறது. வணிக சிலிண்டரின் விலை கடந்த ஜூலை மாதம் முதலே மாதந்தோறும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமாக உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதற்கிடையே கடந்த 2 மாதங்களாக சிலிண்டர் விலை குறைந்தது. இதற்கிடையே, இந்த மாதம் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.