காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழ் நாடு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் தமிழ் நாட்டிற்கு வினாடிக்கு 3500 கன அடி வீதம் 15 நாட்கள் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்மையில் கூடிய காவிரி நீர் ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு 3500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க வேண்டும் என அளித்த பரிந்துரையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட கர்நாடகா ஆலோசித்து வருகிறது.




