கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான பணி ஆணைகளை அண்மையில் முதலமைச்சர் விஜய் வழங்கினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 31 பேரின் அரசு பணி ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழ் நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலாளர் சீனி அகமது கரூர் அரசுப்பணி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுக்கப்படும் போது தங்களது தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த கரூர் அரசு பணியாணை ரத்து வழக்கில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீரன் திருமுருகன் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.




