இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு! நகை, ரொக்கத்துடன் தேசிய விருது பதக்கங்களும் கொள்ளை எனத் தகவல்!

தேசிய விருது பெற்ற காக்கா முட்டை திரைப்பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு. ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகைகளோடு, தேசிய விருதுகளுக்கான வெள்ளி பதக்கங்களும் திருடுபோனதாக தகவல் வெளியாகியுள்ளது. …

தேசிய விருது பெற்ற காக்கா முட்டை திரைப்பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு. ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகைகளோடு, தேசிய விருதுகளுக்கான வெள்ளி பதக்கங்களும் திருடுபோனதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழில் நகரைச் சேர்ந்த தேசிய விருது பெற்ற காக்கா முட்டை மற்றும் கடைசி விவசாயி திரைப்பட இயக்குநர் மணிகண்டனின் பூட்டி இருந்த வீட்டில், பூட்டை உடைத்து உள்ளே சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் பிரோவை உடைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் பிரோவில் இருந்த சுமார் 1 லட்சம் ரொக்கம், 5 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றதாக முதற்கட்ட தகவல். வெளியானது. இயக்குநர் மணிகண்டன் சென்னையில் உள்ள சூழலில் அவர் நேரில் வந்து ஆய்வு செய்தால் மட்டுமே மேலும் பணம் நகை திருடு போனதான என தெரிய வரும் என கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் நேரில் ஆய்வு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடைசி விவசாயி திரைப்படத்திற்காக இயக்குநர் மணிகண்டனுக்கு பெற்ற இரு தேசிய விருதுகளுக்கான பதக்கங்களையும் திருடி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.