விவசாயிகளுக்கு தலா ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் உத்தரவு!

விவசாயிகளுக்கு பாகுபாடின்றி ரூ. 75 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வரை பயிர்க்கடனை தள்ளுபடி செய்து தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கு பாகுபாடின்றி ரூ. 75 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.

தள்ளுபடிக்கு தகுதியான பயிர்க்கடன்களுக்கான காலவரையறை 01.05.2025 முதல் 31.03.2026 வரை நீட்டிக்கப்படுகிறது. விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக அரசு ஒட்டுமொத்தமாக ரூ. 9,062.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது”. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.