தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! – ரூ.198 கோடி சிறப்பு ஊதியம் வழங்க தமிழக அரசு அரசாணை!

தேர்தல் பணியாளர்களுக்கு ஒருமாத சம்பளத்திஅ சிறப்பு ஊதியமாக வழங்க தமிழக அரசு ரூ.198 நிதி ஒதுக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் (15.03.2026 முதல் 04.05.2026 வரை) கடுமையாக உழைத்த அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் (Honorarium) வழங்க தமிழக அரசு ரூ.198,00,84,000/- (ரூ.198 கோடியே 84 ஆயிரம்) நிதி ஒதுக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

  1. ஒரு மாத அடிப்படை சம்பளம் – அதிகபட்சம் ரூ.45,000/-
    • மாவட்ட தேர்தல் அதிகாரிகள் / சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் (RO) / உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் (ARO) / மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) / ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) / சிறப்பு வட்டாட்சியர்கள் (தேர்தல்)
    • மாநகராட்சி ஆணையர்கள் / மாவட்ட வருவாய் அலுவலர்கள் / துணை வட்டாட்சியர்கள் (தேர்தல்) / மண்டல அலுவலர்கள் / பார்வையாளர்களுக்கான தொடர்பு அலுவலர்கள்
  2. ஒரு மாத அடிப்படை சம்பளம் – அதிகபட்சம் ரூ.30,000/-
    • மாவட்ட தேர்தல் அலுவலக தேர்தல் பிரிவில் பணியாற்றிய அலுவலர்கள், ஊழியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், மாநகராட்சி / நகராட்சி ஆணையர்கள்.
    • பறக்கும் படை (Flying Squad) / வீடியோ கண்காணிப்பு குழு / வீடியோ பார்வை குழு / கணக்கு குழு / நடத்தை விதிமுறை குழு / உதவி செலவின பார்வையாளர்கள் / நிலையான கண்காணிப்பு குழு / மண்டல உதவியாளர்கள்.
  3. அரை மாத அடிப்படை சம்பளம் (50%) – அதிகபட்சம் ரூ.20,000/-
    • ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது), Nodal Officers, கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO), கிராம உதவியாளர்கள் மற்றும் ஆட்சியர் அலுவலக வருவாய் பிரிவில் தேர்தல் பணியாற்றிய பிற பிரிவினர்.
  4. மற்ற பணியாளர்கள்:
    • *சீனியர் புரோகிராமர்கள் / புரோகிராமர்கள் / IT ஊழியர்கள்:
      ரூ.20,000/-
    • தேர்தல் டேட்டா ஆபரேட்டர்கள்: ரூ.10,000/-
    • பிரிவு எழுத்தர்கள் (Section Writers): ரூ.7,500/-

முக்கிய நிபந்தனைகள்:

  • 1.5.2026 அன்றைய அடிப்படை சம்பளத்தை வைத்து கணக்கிடப்படும்.
  • தேர்தல் பணியில் முழுமையாக பணியாற்றியிருக்க வேண்டும், முறையான நியமன ஆணை இருக்க வேண்டும்.
  • ஏற்கனவே ஊதியம் பெற்ற மண்டல அலுவலர்களுக்கு, அந்த தொகை கழித்து மீதி வழங்கப்படும்.
  • ஒருவர் இரண்டு பிரிவில் தகுதி பெற்றாலும், ஏதேனும் ஒரு தலைப்பில் மட்டுமே பெற முடியும்.
  • மாவட்ட தேர்தல் அதிகாரிகளே (District Collectors) ECS மூலம் பணத்தை நேரடியாக வழங்குவார்கள். ஒரு மாதத்திற்குள் அரசுக்கு விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த மொத்த செலவும் மாநில அரசே ஏற்கும் என்று நிதித்துறை ஒப்புதலுடன் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.