தவெக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம், மாமல்லபுரம் அருகே தனியாா் நட்சத்திர விடுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய், தனியார் விடுதிக்கு வருகை தந்துள்ளார். முன்னதாக அமைச்சர்கள், தவெக எம்எல்ஏக்கள் வருகை தந்துள்ளனர். எம்எல்ஏக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று முன்னதாக அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தவெக ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மாமல்லபுரத்தில் இன்று பிற்பகல் முதல்வர் விஜய் தலைமையில் தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள், அவர்களின் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை அதிகரித்து வருவது, தவெக எம்எல்ஏக்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் எம்எல்ஏக்களுக்கு முதல்வர் விஜய் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தவெக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் செய்வதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில் அதுகுறித்து பேசப்படும் என்று தெரிகிறது. தொண்டர்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க நூற்றுக்கணக்கில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களுக்கும் கூட்டம் நடைபெறும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




