10 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்

10 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் ஏழு பேரை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குடிவாடா பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது…

10 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் ஏழு பேரை கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குடிவாடா பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் காரில் வந்த 7 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் காரில் 6 செம்மர கட்டைகளை கடத்தி வந்தது தெரிந்தது. மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், திருப்பதி நகரை சேர்ந்த ரமேஷ் மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த 6 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்பேட்டை பகுதியில் உள்ள குடோனில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அங்கே சோதனை நடத்திய ஆந்திர மாநில போலீசார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான 12 டன்கள் எடை கொண்ட செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஏழு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.