#WIvsENG | ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட…

cricket, west indies, england, odi series

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் நாளை ஆண்டிகுவா மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும் அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஷாய் ஹோப் தலைமையிலான அணியில் ஜூவல் ஆண்ட்ரூ, கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ போர்டு, ஷிம்ரன் ஹெட்மையர், அல்ஜாரி ஜோசப், ஷர் ஜோசப், பிரண்டன் கிங், எவின் லூயிஸ், குடகேஷ் மோடி, ஷெர்பேன் ரூதர்போர்டு, ஜெய்டன் சீல்ஸ், ரொமரியோ ஷெப்பர்ட், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இரண்டாவது ஒருநாள் போட்டி நவம்பர் 2ம் தேதி ஆண்டிகுவா மைதானத்திலும், 3வது ஒருநாள் போட்டி நவம்பர் 6ம் தேதி பார்படாஸ் மைதானத்திலும் நடைபெற உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.