இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே அரசின் முக்கிய நோக்கம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இந்த அரசின் முக்கிய நோக்கம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (27.07.2021) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்…

இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே இந்த அரசின் முக்கிய நோக்கம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (27.07.2021) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களிலும் பெரிய அளவிலான உண்மையான பலன்தரும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டு ம் எனவும், தொழிற்சாலைகளின் எதிர்கால தேவைக்கேற்றவாறு பயிற்சியாளர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி (Futuristic Employable Skill Training) வழங்கவும், அரசினர் தொழில் பயிற்சி நிலையங்களில் கட்டுமான திறன் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்கவும், அவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஒருங்கிணைத்து அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக கைப்பேசி செயலினை (Mobile App) உருவாக்கிடவும், தொழிலாளர் துறையில் அதிக அளவிலான சேவைகளை இணைய வழியாக்கி தொழில் புரிவதை சுலபமாக்கிடவும், தொழிலாளர்கள் நலனுக்கான புதிய திட்டங்களை கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

மேலும் ஆய்வுக் கூட்டத்தில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு.இரா.கிர்லோஷ் குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.