முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

திமுக ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.


சென்னை கொளத்தூரில் அனிதா பயிற்சி மையத்தில் Tally பயிற்சி முடித்த 81 மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினி வழங்கி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவி அனிதாவின் பெயரில் பயிற்சி மையத்தை 2019ல் தொடங்கியதாக குறிப்பிட்டார்.

இதன் மூலம் பலர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாகக் கூறிய ஸ்டாலின், தேர்தல் அறிக்கை வெளியிடப்படவில்லை. இருந்தாலும் திமுக தலைவர் என்கிற முறையில் தமிழகம் முழுவதும் அனிதா பயிற்சி மையம் தொடங்கப்படும் என உறுதியளிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும், லட்சக்கணக்கானோர் வேலையின்றி இருக்கின்றனர் எனவும் குறிப்பிட்ட ஸ்டாலின், அதைப்பற்றி இந்த அரசிற்கு கவலை இல்லை. 3 மாதத்தில் ஆட்சி மாறப் போகிறது, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிப்போம் என்று உறுதியளித்தார்.

Advertisement:
SHARE

Related posts

இடஒதுக்கீடு விவகாரம்: அமைச்சர் தங்கமணி இல்லத்தில் பாமகவுடன் பேச்சுவார்த்தை!

Saravana

4 நாட்களில் சாதிச்சான்றிதழ்; அமைச்சர் அதிரடி

Saravana Kumar

டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

Ezhilarasan

Leave a Reply