முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது – லாவ் அகர்வால்

நாடு முழுவதும் ஏழு மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது என சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா 2வது அலையில் மிகவும் உச்ச எண்ணிக்கையில் கடந்த நாட்களில் தினசரி கொரோனா பாதிப்பு என்பது 132 நாட்களுக்கு பிறகு 30,000 கீழாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதைப்போன்று நாடு முழுவதும் 62 மாவட்டங்களில் மட்டுமே தினசரி கொரோனா பாதிப்பு 100க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது என குறிப்பிட்டுள்ள லாவ் அகர்வால், இந்தியாவைப் பொருத்தமட்டில் ஒட்டு மொத்தமாக ஏழு மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிகபட்சமாக கேரளாவைப் பொறுத்தவரை 7 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 97.4 ஆக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டார். மேலும் ஒட்டுமொத்தமாக 54 மாவட்டங்களில் கொரோனா பரவல் சதவீதம் 10க்கும் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம்

Gayathri Venkatesan

“உணவகங்களை மூடுமாறு மாநகராட்சி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்” – ஹோட்டல்கள் சங்கம்

Jeba Arul Robinson

ஆன்லைன் சூதாட்டம்; சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு – மத்திய அரசு தகவல்

G SaravanaKumar