கிரேன் மோதி விவசாயி உயிரிழப்பு

வளவனூர் அருகே சைக்கிளில் சென்ற விவசாயி மீது கிரேன் மோதி விபத்துக்குள்ளானதில் தலை நசுங்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வளவனூரை அடுத்த அற்பிசம்பாளையம் காலனியை பகுதியை சேர்ந்த கதிர்வேல்…

வளவனூர் அருகே சைக்கிளில் சென்ற விவசாயி மீது கிரேன் மோதி விபத்துக்குள்ளானதில் தலை நசுங்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வளவனூரை அடுத்த அற்பிசம்பாளையம் காலனியை பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்ற விவசாயி தனது சைக்கிளில் வளவனூருக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வளவனூரில் இருந்து சிறுவந்தாடு செல்லும் சாலையில் சென்றபோது, பின்னால் வந்த கிரேன் சைக்கிள் மீது மோதியது. இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்த கதிர்வேல் மீது கிரேன் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த வளவனூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கிரேன் மோதிய விபத்தில் விவசாயி தலைநசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.