கள்ளக்குறிச்சி அருகே காதலித்த பெண்ணை மணம் முடிக்க மறுத்த இளைஞருக்கு, அவர் காதலித்த பெண்ணுடனே, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையினர் திருமணம் செய்துவைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ளது தாவடிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் இவர்து மகன் ஜோதிஸ்வரன். இவரும் இவரது உறவினரான பாலுசாமி மகள் கவியரசி என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் காதலித்த பெண்ணை ஜோதிஸ்வரன் திருமணம் செய்ய மறுத்து வந்ந்தார். இந்த நிலையில் கவியரசி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தந்தை பாலுசாமி புகார் அளித்தார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம் ஜோதீஸ்வரன், கவியரசியை காதலித்ததை ஒப்புக்கொண்டார். இந்த நிலையில் உறவினர்கள் பேசி முடித்து கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பிள்ளையார் கோயிலில் திருமணத்தை நடத்தி வைத்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் காதலன் தன்னை காதலித்து ஏமாற்ற முயற்சிப்பதாக கூறிய நிலையில் காதலனுடன் திருமணமாகி ஒரு சேர வீட்டிற்கு சென்றனர்.







